போக்குவரத்து அதிகாரிகளை கண்டித்து கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்


போக்குவரத்து அதிகாரிகளை கண்டித்து கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 9 Jun 2017 3:30 AM IST (Updated: 9 Jun 2017 12:42 AM IST)
t-max-icont-min-icon

காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் உள்ள துறைமுக நுழைவு வாயிலில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ராயபுரம், 

சென்னை துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான கன்டெய்னர் லாரிகள் சரக்குகளை ஏற்றியும், இறக்கியும் செல்கின்றன. அவ்வாறு செல்லும் கன்டெய்னர் லாரிகளை அதிக எடையுள்ள சரக்குகளை ஏற்றிச்செல்வதாகக்கூறி வட்டார போக்குவரத்து அதிகாரிகள்  அபராதம் விதிப்பதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து நேற்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் உள்ள துறைமுக நுழைவு வாயிலில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கன்டெய்னர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனையடுத்து லாரி உரிமையாளர்களுடன் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் துறைமுக பொறுப்பு கழக ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதில் அபராதம் விதிக்க மாட்டோம் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இந்த வேலைநிறுத்தத்தால் துறைமுகத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக பணிகள் பாதிக்கப்பட்டன.

Next Story