மின்சாரம் தாக்கி இறந்த ராணுவ வீரர் உடல் தகனம் அரசு மரியாதையுடன் ஏர்வாடியில் நடந்தது
திரிபுரா மாநிலத்தில் மின்சாரம் தாக்கி இறந்த ராணுவ வீரர் உடல், அரசு மரியாதையுடன் சொந்த ஊரான ஏர்வாடியில் நடந்தது.
ஏர்வாடி,

மின்சாரம் தாக்கி சாவு
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அரிகரன் (வயது 40). ஐ.டி.ஐ. ஏ.சி. மெக்கானிக் படித்துள்ள இவர், திரிபுரா மாநிலத்தில் உள்ள துணை ராணுவத்தில் வேலை பார்த்து வந்தார். பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கி அரிகரன் பரிதாபமாக இறந்தார்.
அவரது உடலுக்கு குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அரிகரனின் உடல் விமானம் மூலம் கொல்கத்தா கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ஆம்புலன்சு மூலம் அரிகரன் உடலை கோதைசேரி கிராமத்துக்கு கொண்டு வந்தனர்.
உடல் தகனம்
அரிகரன் உடலை பார்த்து மனைவி மற்றும் பெற்றோர் கதறி அழுதனர். அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி இருந்தது. அரிகரன் உடலுக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து அவரது உடல் ஏர்வாடி– அணைக்கரை ரோட்டில் உள்ள மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story