புதிதாக பொறுப்பேற்ற திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பேட்டி
மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு காணப்படும் என்று திருப்பூர் கலெக்டராக புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட கே.எஸ்.பழனிசாமி கூறினார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டராக இருந்த எஸ்.ஜெயந்தி நில நிர்வாக இணை கமிஷனராக (நிலம்) மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி மாவட்ட கலெக்டராக இருந்த கே.எஸ்.பழனிசாமி திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
நேற்று காலை 11.15 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கே.எஸ்.பழனிசாமி (வயது 49) கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரைத்தொடர்ந்து சப்-கலெக்டர்கள், ஆர்.டி.ஓ.க்கள், அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நிருபர்களிடம் கூறும்போது, “தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி திருப்பூர் மாவட்ட கலெக்டராக இன்று (நேற்று) பொறுப்பேற்றுள்ளேன். திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள், அரசின் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு காணப்படும்” என்றார். உயர் அதிகாரிகள் வாகனங்களில் சைரன் விளக்குகள் பொருத்தப்பட்டு இருப்பது குறித்து நிருபர்கள் அவரிடம் கேட்டதற்கு, தற்போது தான், பொறுப்பேற்றுள்ளதாகவும், அதுதொடர்பாக விசாரிக்கப்படும் என்றும் கலெக்டர் கூறினார்.
விவசாய குடும்பத்தில் பிறந்தவர்
கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையாகும். விவசாய குடும்பத்தில் பிறந்தவர். கால்நடை மருத்துவ படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அதன்பிறகு 1997-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் ஆர்.டி.ஓ.வாக பணியாற்றினார். பின்னர் திண்டுக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும்(பொது), சிவகங்கை மாவட்ட வருவாய் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
அதைத்தொடர்ந்து சேலம் மாநகராட்சி ஆணையாளராகவும், செய்தி மக்கள் தொடர்பு துறையின் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தேனி மாவட்ட கலெக்டராகவும், அதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றி இருக்கிறார்.

Related Tags :
Next Story