சீதாராம்யெச்சூரியை தாக்க முயன்றவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்


சீதாராம்யெச்சூரியை தாக்க முயன்றவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2017 4:15 AM IST (Updated: 9 Jun 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

சீதாராம்யெச்சூரியை தாக்க முயன்றவர்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை,

டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை நிருபர்கள் போல் வந்த 2 பேர் தாக்க முயன்றுள்ளனர். இதை கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் சின்னத்துரை, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.ராஜசேகரன், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் பெரி.குமாரவேல், ப.சண்முகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story