முருகன், சொக்கலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கிழுமத்தூர் குடிக்காடு, மீன்சுருட்டியில் உள்ள முருகன், சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மங்களமேடு,
பெரம்பலூர் மாவட்டம் கிழுமத்தூர் குடிக்காடு கிராமத்தில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அரசு விநாயகர், அய்யப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தனித்தனியே சன்னதி உள்ளது. இந்நிலையில் முருகன் மற்றும் பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமானங்கள் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழாவையொட்டி முதற்கால யாக சாலை பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை, மூன்றாம் கால யாக சாலை பூஜை, அபிஷேக ஆராதனை மற்றும் பூர்ணாகுதி நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
நேற்று காலை 8.30 மணியளவில் கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து பரிவார தெய்வங்களான விநாயகர், அய்யப்பன் சுவாமிகள் மூலஸ்தான விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க முருகன் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் குருக்கள் திருஞானசம்பந்தம் குழுவினர் நடத்தி வைத்தனர். இதில் கிழுமத்தூர் குடிக்காடு, வதிஷ்டபுரம், மங்களமேடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கிழுமத்தூர் குடிக்காடு கிராமமக்கள் செய்திருந்தனர். இரவு சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது.
சொக்கலிங்கேஸ்வரர் கோவில்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கடைவீதியில் மீனாட்சி சமேத சொக்கலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குரு பஞ்சாட்சர சித்தர் ஜீவ சமாதி மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதி உள்ளது. இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கு பின்னர் சொக்கலிங்கேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமானங்கள் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழாவையொட்டி விநாயகர் பூஜையுடன் முதற்கால யாக சாலை பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை, மூன்றாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.
திரளான பக்தர்கள்
நேற்று நான்காம் கால யாக சாலை பூஜை நடை பெற்றது. தொடர்ந்து காலை 10.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைத்து பூஜிக்கிப்பட்ட கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் பஞ்சாட்சர சித்தர் ஜீவ சமாதி மூலஸ்தான விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க சொக்கலிங்கேஸ்வரர் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Tags :
Next Story