சீதாராம் யெச்சூரி தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்


சீதாராம் யெச்சூரி தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2017 4:15 AM IST (Updated: 9 Jun 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

சீதாராம் யெச்சூரி தாக்கப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுரை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பத்தை கண்டித்து, மதுரை மாநகர், மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செல்லூர் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிக்குழு செயலாளர் நரசிம்மன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் இரா.அண்ணாதுரை முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் ராதா, ரமேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.


Next Story