தரப்பரிசோதனையில் பாலில் கலப்படம் கண்டுபிடிப்பு
மதுரையில் நடந்த தரப் பரிசோதனையில் பாலில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மதுரை,
மதுரை கோ.புதூரில் உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் பாலில் கலப்படம் உள்ளதா? என்பதை ஆராயும் தரப்பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பரிசோதனை செய்வதற்காக மதுரை மாநகரின் பல்வேறு இடங்களில் இருந்து 108 பால் மாதிரிகளை சோதனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. இந்த பால் மாதிரிகள், நேற்று கலெக்டர் வீரராகவராவ் முன்னிலையில் பரிசோதிக்கப்பட்டது.
108 பால் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 107 மாதிரிகள் சரியாக இருந்தது. ஒன்றில் மட்டும் சோப்பு அல்லது பைகார்பனேட் போன்ற ஒரு பொருள் கலப்படம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
முன்னதாக மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் பேசும்போது கூறியதாவது:-
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தும் பாலில் கலப்படம் ஏதும் உள்ளதா என்பதை அறிவதற்கு இந்த தரப்பரிசோதனை நடைபெறுகிறது. வருகிற 12-ந்தேதி மேலூரிலும், 14-ந்தேதி வாடிப்பட்டியிலும், 16-ந்தேதி திருமங்கலத்திலும், 19-ந்தேதி உசிலம்பட்டி பகுதிகளிலும் பால் தரப்பரிசோதனை முகாம் நடத்தப்பட உள்ளது.
பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் பாலை எடுத்து வந்து தரப்பரிசோதனை செய்து கொள்ளலாம். இதில் பாலில் உள்ள கொழுப்பு, அடர்த்தி, வேதிப்பொருள் கலப்படம் குறித்து பரிசோதனை செய்யப்படும். பாலில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அபராதம்
2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை 340 நபர்களிடமிருந்து பால் தரப்பரிசோதனை செய்யப்பட்டு 56 சிவில் வழக்குகளும், 31 குற்றவியல் வழக்குகளும் பதியப்பட்டு ரூ.6 லட்சத்து 69 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 48 பால் மாதிரிகள் தரப்பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் லட்சுமிநாராயணன், துணை இயக்குனர்(சுகாதாரப்பணிகள்) அர்ஜுன், நகர்நல அலுவலர் சதீஷ்ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story