மனைவியிடம் இருந்து இந்தி நடிகர் ஹிமேசுக்கு விவாகரத்து பாந்திரா குடும்பநல கோர்ட்டு வழங்கியது


மனைவியிடம் இருந்து இந்தி நடிகர் ஹிமேசுக்கு விவாகரத்து பாந்திரா குடும்பநல கோர்ட்டு வழங்கியது
x
தினத்தந்தி 9 Jun 2017 4:28 AM IST (Updated: 9 Jun 2017 4:28 AM IST)
t-max-icont-min-icon

மனைவியிடம் இருந்து இந்தி நடிகர் ஹிமேசுக்கு பாந்திரா குடும்ப நல கோர்ட்டு விவாகரத்து வழங்கி உள்ளது.

மும்பை,

மனைவியிடம் இருந்து இந்தி நடிகர் ஹிமேசுக்கு பாந்திரா குடும்ப நல கோர்ட்டு விவாகரத்து வழங்கி உள்ளது.

இந்தி நடிகர்

இந்தி திரைப்பட நடிகர் மற்றும் இசையமைப்பாளராக இருப்பவர் ஹிமேஷ். இவரது மனைவி கோமல்.

ஹிமேசுக்கும், நடிகை சோனியா கபூருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்ததாக வதந்திகள் பரவின. இதையடுத்து ஹிமேசுக்கும் அவரது மனைவிக்கும் பிரச்சினை வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன் விவாகரத்து கேட்டு 2 பேரும் பாந்திரா குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

விவாகரத்து

மனுவை விசாரித்த நீதிபதி, 2 பேரையும் சில மாதங்கள் தனியாக வசிக்க உத்தரவிட்டார். எனினும் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிவதில் உறுதியாக இருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் 2 பேருக்கும் பாந்திரா குடும்ப நல கோர்ட்டு விவாகரத்து வழங்கியது.

இதுகுறித்து நடிகர் ஹிமேஷ் கூறும்போது, “உறவிற்கு மதிப்பளிக்கும் வகையில் நாங்களே பேசி சுமுகமாக பிரிகிறோம். எங்களின் முடிவை குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டு உள்ளனர்” என்றார்.

Next Story