இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: விழுப்புரத்தில் அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்துள்ள மத்திய அரசை கண்டித்து விழுப்புரத்தில் அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
விழுப்புரம்,
இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்தும், தமிழக அரசின் பாராமுகத்தை கண்டித்தும் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகள் மற்றும் மதசார்பற்ற அமைப்புகள் சார்பில் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் குலாம்மொய்தீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சவுரிராஜன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அமீர்அப்பாஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முஸ்தாக்தீன், திராவிடர் கழக சுப்புராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும்
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் ராதாமணி எம்.எல்.ஏ., துணை செயலாளர்கள் முத்தையன், ஜெயச்சந்திரன், மைதிலி ராஜேந்திரன், பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் புஷ்பராஜ், கலிவரதன், நகர தலைவர் சக்கரை, துணை செயலாளர் புருஷோத்தமன், வக்கீல் சுவைசுரேஷ், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சித்திக்அலி, காங்கிரஸ் நகர தலைவர் செல்வராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் தமிழேந்தி உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அனைத்துக்கட்சியினரும் மாட்டு இறைச்சி தடைக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மாட்டுக்கறியை சாப்பிட்டனர். தொடர்ந்து, மாட்டு இறைச்சிக்கான தடை உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், அதை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்றவர்களை கைது செய்வதோடு அவர்கள் சார்ந்த இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Tags :
Next Story