கோபி அருகே அடிப்படை வசதி கேட்டு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் அரை நிர்வாணத்துடன் ஆர்ப்பாட்டம்
கோபி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் அரை நிர்வாணத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடத்தூர்,
கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் காலனியில் 300 வீடுகள் உள்ளன. இங்கு 1,000 பேர் வசித்து வருகின்றனர்.
இந்தப்பகுதியில் சாக்கடை வடிகால் பராமரிப்பு பணி உள்பட அடிப்படை வசதிகள் கேட்டு கோபி வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு கொடுப்பதற்காக தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு அரை நிர்வாணத்துடன் கோபி-சத்தி மெயின்ரோட்டுக்கு நேற்று காலை வந்தனர்.
மனு கொடுத்தனர்
பின்னர் அங்கிருந்து கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றனர்.
அப்போது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கோஷமிட்டனர். அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதியை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில குழு உறுப்பினர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story