மனிதர்களால் மறைந்துபோன ‘பயணிப் புறா’
வட அமெரிக்காவின் மலைப்பகுதியில் ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்தவை தான் பயணிப் புறாக்கள்.
வட அமெரிக்காவின் மலைப்பகுதியில் ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்தவை தான் பயணிப் புறாக்கள். அப்போதெல்லாம் அந்தப் பகுதியில் 500 கோடி பயணிப் புறாக்கள் இருந்துள்ளன. இந்தப் புறாக்கள் கூட்டமாக வானில் பறக்கத் தொடங்கினால், அந்த ஊர்வலம் முடிய பல மணி நேரம் ஆகுமாம். பொதுவாக பறவைகள் இறக்கைகளை மட்டுமே விரித்துப் பறக்கும். ஆனால் பயணிப் புறாக்கள் இறக்கைகளை மட்டுமல்லாமல், அதன் கூடவே வாலையும் சேர்த்து இறக்கை போல் விரித்துக் கொள்ளும். அந்த அழகைக் காணும்போது, கற்பனைக் கதைகளில் வரும் தேவதைகள் வானில் கூட்டமாக பறப்பதைப் போல இருக்கும்.
இந்த வகைப் புறாக்கள் தனியாக பறப்பதில்லை. எப்போது பறந்தாலும் தன் இனத்தில் உள்ள அத்தனைப் புறாக்களையும் அழைத்துக் கொண்டு, கூட்டமாகத்தான் பறக்கும். கோடிக்கணக்கில் இருக்கும் இந்த புறாக்கள் ஓரிடத்தை கடப்பதற்கு சில மணி நேரம் ஆகும். இத்தனைக்கும் இது மணிக்கு 100 கி.மீ. என்ற வேகத்தில் பறக்கும் சக்தி கொண்டவை.
1873–ம் ஆண்டு ஏப்ரல் 8–ந் தேதி மெக்சிகன் நகரின் வான்வெளியில், காலை 7.30 மணிக்கு தொடங்கிய புறா ஊர்வலம் முடிவதற்கு மாலை 4.30 மணி ஆனது. ‘தலை தூக்கி, வான் நோக்கிப் பார்த்தால் கண்ணுக்கு தெரிந்த தூரம் வரை பயணிப் புறாக்கள் சாரை சாரையாக வந்துக் கொண்டே இருந்தன’ என்று தங்கள் கருத்தை அப்போது இருந்த வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்தக் காட்சிகள் அந்த நாட்களில் மிகச் சாதாரணமானவை. பயணிப் புறாக் களின் ஊர்வலம் தொடங்கிவிட்டால் அந்தப் பகுதியே, கடுமையான மேக மூட்டத்திற்கு உள்ளானது போல் இருள் சூழ்ந்துவிடுமாம்.
இப்படிப் பார்ப்பவர்கள் கண்ணை உறுத்தும் அளவுக்கு பறந்து பறந்து பரவசப்படுத்தியதுதான், பயணிப் புறாக்களுக்கு எமனாகவும் அமைந்துவிட்டது. வட அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் குடியேறியபோது, அவர்கள் இந்த புறாக்களை மிக தொந்தரவாக நினைத்தார்கள். அதனால் புறாக்களை வேட்டையாடத் தொடங்கினார்கள்.
இவற்றை வேட்டையாடுவது எளிதான ஒன்றாக இருந்தது. வெறுமனே வலை விரித்தால் போதும் கொத்துக் கொத்தாக புறாக்கள் சிக்கிக்கொள்ளும். துப்பாக்கியால் சுட்டால், சத்தம் கேட்ட நொடியிலேயே அதன் இதயத் துடிப்பு ஏகத்துக்கு எகிறி கூட்டம் கூட்டமாக இறந்து விழும். கூட்டமாக பறக்கும் போது, ஒரு கட்டையை வீசினால் கூடப் போதும். கொத்து கொத்தாக புறாக்கள் விழும். அதனால் இந்தப் பறவைகளை இஷ்டத்துக்கு மனம் போன போக்கில் கொன்று குவித்தார்கள் ஐரோப்பியர்கள்.
1884–ல் 30 லட்சம் பயணிப் புறாக்களை கொன்றுகுவித்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதோடு நில்லாமல், இந்தப் புறாக்களை ரெயில் மூலம் நியூயார்க் போன்ற இடங்களுக்கு அனுப்பத் தொடங்கினார்கள். கப்பல் மூலமும் புறா வர்த்தகம் லாபகரமாக நடைபெற்றது. புறாக் கறி, விலை குறைவாக கிடைத்ததால் இதற்கு அமெரிக்கர்கள் மத்தியில் ஏகப்பட்ட கிராக்கி. குறைவான விலையில் மிருதுவான சுவையான இறைச்சி என்பதால், இதனை முழுநேர வேலையாக செய்து புறாக்களை வேகவேகமாக பரலோகம் அனுப்ப ஆரம்பித்தார்கள்.
1855–ம் ஆண்டு மட்டும் 3 லட்சம் புறாக்கள் பார்சலாக அனுப்பப்பட்டன. 1869–ல் மெக்சிகன் நகரில் இருந்து வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளுக்கு 75 லட்சம் புறாக்களை சுவைக்க அனுப்பிவைத்தார்கள்.
இந்த வகை புறாக்களில் உள்ள பெண் புறா, ஆண்டுக்கு ஒரே ஒரு முட்டை மட்டும்தான் இடும். எனவே அழிக்கப்படும் வேகத்திற்கு அவற்றால் இனப்பெருக் கம் செய்ய முடியவில்லை. இதனால் 20–ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனது பயணத்தை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலைக்கு பயணிப் புறா தள்ளப்பட்டது.
உலகின் கடைசி பயணிப் புறாவான ‘மார்த்தா’, சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் 1914 செப்டம்பர் 1–ந் தேதி மதியம் ஒரு மணிக்கு தனது மூச்சை நிறுத்தியது.
தான் மட்டுமே மேலான உயிரினம் என்ற மனிதனின் எண்ணத்தால், ஏராளமான உயிரினங்கள் இந்த உலகத்தில் இருந்து காணாமல் போயிருக்கின்றன. என்னதான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தாலும், மனிதனால் புதிதாக ஒரு உயிரினத்தை உருவாக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை!
***
ஆழமான தபால்பெட்டி
ஜப்பான் நாட்டில் ‘சுசாமி பே’ பகுதியில் இருக்கும் தபால்பெட்டி தான் உலகிலேயே ஆழமான தபால்பெட்டி. ஏனெனில் கடலின் மேற்
புரத்தில் இருந்து 10 மீட்டர் ஆழத்தில் இந்த தபால் பெட்டியை வைத்திருக்கிறார்கள்.
படகு சாலை
டச் நாட்டின் கியாதிரான் நகரில் தார் சாலைகளும் இல்லை; புகையைக் கக்கிச் செல்லும் வாகனங்களும் இல்லை. ஏனெனில் பசுமைப் போர்த்திய கிராமத்தில் படகு மூலமாகவே போக்குவரத்து நடைபெறுகிறது. மண் சாலைகளில் தண்ணீரை நிரப்பி, படகுகளில் இடம் மாறிக்கொள்கிறார்கள்.
அதுவும் துடுப்புப் படகுகளில் தான்.
பூனை ஆர்மோனியம்
17–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிர்ச்சர், புதுவிதமான ஆர்மோனியத்தை வடிவமைத்திருக்கிறார். அதுதான் பூனை ஆர்மோனியம். ஆர்மோனியப் பெட்டிகளின் முன்புறத்தில் பூனைகளுக்கு சிறுசிறு கூண்டுகள் அமைத்து, அதன் அடியில் கட்டைகளை வைத்திருக்கிறார்கள். ஆர்மோனியக் கட்டைகளின் அடியை தாங்கமுடியாமல் பூனைகள் கத்துமாம். இதையும் ஒரு இசையாக ரசித்திருக்கிறார்கள்.

Related Tags :
Next Story