சமுதாய வளர்ச்சிக்கு சேவைபுரிந்தவர்கள் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
முதல்–அமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவை புரிந்தவர்கள் முதல்–அமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
இளைஞர் விருதுதமிழ்நாட்டில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் 2015–ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் முதல்–அமைச்சரின் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது, ரூ.50 ஆயிரம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகள் உள்ளடக்கியதாகும். அதன்படி இந்த ஆண்டு முதல்–அமைச்சரின் மாநில இளைஞர் விருது, வருகிற ஆகஸ்டு 15–ந்தேதி சுதந்திர தினத்தன்று முதல்–அமைச்சரால் வழங்கப்பட உள்ளது.
தகுதிகள்இந்த விருது பெற 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். 2016–17–ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டும் பரிசீலிக்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு விண்ணப்பதாரர் குறைந்தது 5 வருடங்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக பணியாற்றி இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரி, பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருது பெற விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பிப்பது எப்படிஇதற்கான விண்ணப்ப படிவம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் வருகிற 15–ந்தேதி மாலை 5 மணிக்குள், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்ட பிரிவு, மாவட்ட விளையாட்டரங்கம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்
மேலும் விவரங்களுக்கு 0461– 2321149 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.