பிரதமருக்கு கடிதம் எழுதிய மாணவியை பாராட்டிய அமைச்சர்
கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் கேட்டு பிரதமர் நரேந்திரமோடிக்கு,
இப்பள்ளி மாணவி சரஸ்வதி கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழ்நாடு தலைமை செயலகத்திற்கு அது குறித்து கோரிக்கை நிறைவேற்ற கோரி உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அந்த மாணவி மீண்டும் ஒரு கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி இருந்தார். அதில் ‘’நாங்கள் அனைவரும் பாசாகி விட்டோம். உங்கள் உத்தரவு இன்னும் பாசாகவில்லை” என எழுதி இருந்தார்.
அதற்கும் பதில் கடிதம் வந்தது. இது குறித்து அறிந்த அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மாணவி சரஸ்வதியை அழைத்து பாராட்டினார். அப்போது ‘’உத்தரவு பாசாகி விட்டது என மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுது” என கூறினார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Related Tags :
Next Story