கீரனூர் அரசு பெண்கள் பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு


கீரனூர் அரசு பெண்கள் பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Jun 2017 9:45 PM GMT (Updated: 9 Jun 2017 6:50 PM GMT)

பொதுமக்கள் தொடர் போராட்டம் எதிரொலியாக கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர்செங்கோட்டையன் திடீரென ஆய்வு செய்தார்.

கீரனூர்,

கீரனூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கழிப்பறை வசதி, சைக்கிள் நிறுத்துமிடம், ஆய்வுக்கூடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என்பதால், பள்ளி அருகிலேயே செயல்படாமல் கிடக்கும் பொதுப்பணி துறை கட்டிடத்தை பள்ளியின் பயன்பாட்டிற்கு தரக்கோரி சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் எதிரொலியாக நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்ற மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வந்திருந்த அமைச்சர் செங்கோட்டையன் கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்து வகுப்பறைகள், கழிப்பறை வசதி, அடிப்படை வசதிகள் குறித்து திடீர் ஆய்வு செய்தார். பின்னர் அருகில் உள்ள பொதுப்பணி துறை அலுவலகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொதுப்பணி துறை கட்டிடம்

பின்னர் பள்ளி தலைமையாசிரியர் டயானா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஒய்யப்பன், பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் பள்ளியின் குறைபாடுகளை கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், விரைவில் பள்ளிக்கு கூடுதல் நிதி ஒதுக்கி வகுப்பறை கட்டிடம், கழிப்பறை ஆகியவை உடனடியாக கட்டி தருவதாக உறுதியளித்தார். மேலும் முதல்-அமைச்சரிடம் பேசி பொதுப்பணி துறை கட்டிடத்தை பள்ளிக்கு ஒதுக்கி தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். அப்போது எம்.எல்.ஏ. ஆறுமுகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story