புதுக்கோட்டையில் முதல்-அமைச்சர் விழாவுக்கு செல்ல முயன்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கைது
புதுக்கோட்டையில் முதல்-அமைச்சர் கலந்து கொண்ட விழாவுக்கு செல்ல முயன்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்காக அரசு சார்பில் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, திருமயம் ரகுபதி, ஆலங்குடி மெய்யநாதன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இவர்களுக்கு நேற்று முன்தினம் அரசு சார்பில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலை மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவிற்கு செல்ல எம்.எல்.ஏ.க்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தி.மு.க.வினரும் கட்சி அலுவலகம் வந்தனர். இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழாவிற்கு செல்வதற்காக கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர்.
வாக்குவாதம்
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். முதல்-அமைச்சர் விழாவுக்கு நீங்கள் சென்றால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் தி.மு.க. நகர செயலாளர் நைனாமுகமது தலைமையிலான தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தி.மு.க. நிர்வாகிகளை கைது செய்து, போலீஸ் வேனில் ஏற்றினார்கள். இந்தநிலையில் கைது செய்யப்பட்ட தி.மு.க. நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் கூறியதை தொடர்ந்து, போலீசார் வேனில் ஏற்றி இருந்த தி.மு.க.வினரை இறக்கி விட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது
இதைத்தொடர்ந்து மீண்டும் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழாவிற்கு செல்ல முயன்றனர்.
இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, மெய்யநாதன் உள்பட கட்சி நிர்வாகிகள் 80 பேரை கைது செய்து, புதுக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story