மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்


மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Jun 2017 3:30 AM IST (Updated: 10 Jun 2017 12:47 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் பகுதிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையில் இருந்த 6 டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் சில குடிமகன்கள் குடிப்பழக்கத்தை விடமுடியாமல் பாண்டி பஜார், சுத்தமல்லி, இரும்புலிகுறிச்சி மற்றும் கிராமங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு சென்று மது வாங்கி வருகின்றனர். இதனால் கிராமப்புற பகுதிகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது. ஒருவரே மறுதினத்திற்கும், சிலர் ஒரு வாரத்திற்கும் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி செல்கிறார்கள். மது தட்டுப்பாட்டை பயன்படுத்தி ஜெயங்கொண்டம் நகரில் பல்வேறு இடங்களிலும், உடையார்பாளையம், வாணதிரையன்பட்டிணம், ஒக்கநத்தம் உள்பட பல்வேறு கிராம பகுதிகளிலும் சிலர் மதுபாட்டில்களை மொத்தமாக புதுச்சேரியில் சென்று வாங்கி வந்து பதுக்கி வைத்து விற்கின்றனர்.

நடவடிக்கை

மேலும் சிலர் டீக்கடைகளிலும், பெட்டிக்கடைகளிலும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவ்வாறு விற்கப்படும் மதுபாட்டில்களை வாங்கி குடித்து சிலர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட காவல்துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்து மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story