லாரிகள் இயக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்


லாரிகள் இயக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2017 3:15 AM IST (Updated: 10 Jun 2017 12:53 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவர்கள் சென்று வரும் நேரத்தில் லாரிகள் இயக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டத்தில் சிமெண்டு ஆலைகள் அதிகளவில் இயங்கி வருகின்றன. இதனால் தினமும் சுண்ணாம்புக்கல், சிமெண்டு உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருகின்றன. இந்த நிலையில் விபத்தினை தடுக்கும் பொருட்டு காலை, மாலை என இருவேளையிலும் பள்ளிக்கு மாணவர்கள் சென்று வரும் நேரத்தில் அரியலூர் மாவட்டத்தில் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களின் இயக்கத்திற்கு குறிப்பிட்ட நேரம் தடைவிதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் காலை பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் நேரத்தில் லாரிகள் இயங்கி கொண்டிருந்தன. அப்போது இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மோதுவதுபோல் லாரி ஒன்று சென்றது.

சாலை மறியல்

இதனால் அங்கிருந்த பொதுமக்கள் கூடினர். பின்னர் பொதுமக்கள் வி.கைகாட்டி அருகே வந்து கொண்டிருந்த சிமெண்டு ஆலை லாரிகளை மறித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள், இனி இதுபோல தவறுகள் ஏற் படாது என கூறியதை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story