ஆந்திராவுக்கு ரெயிலில் கடத்திய 1 டன் அரிசி பறிமுதல்
ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை நோக்கி சென்ற 2 புறநகர் மின்சார ரெயில் பெட்டிகளில் 28 மூட்டைகளில் கேட்பாரற்று கிடந்த சுமார் 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி வட்டவழங்கல் அதிகாரி இளவரசி தலைமையில் அதிகாரிகள் கும்மிடிப்பூண்டி முதல் ஆரம்பாக்கம் வரை, ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை நோக்கி சென்ற புறநகர் மின்சார ரெயில்களில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது எளாவூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை நோக்கி சென்ற 2 புறநகர் மின்சார ரெயில் பெட்டிகளில் 28 மூட்டைகளில் கேட்பாரற்று கிடந்த சுமார் 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த அரிசி ஆந்திராவுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தது பின்னர் தெரியவந்தது.
Related Tags :
Next Story