74 பேருக்கு வீடு கட்டுமான பணி தொடங்க ஆணை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்


74 பேருக்கு வீடு கட்டுமான பணி தொடங்க ஆணை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்
x
தினத்தந்தி 10 Jun 2017 3:30 AM IST (Updated: 10 Jun 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி, பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள

வாய்மேடு,

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் திறப்பு விழா மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 74 பயனாளிகளக்கு வீடுகள் கட்டும் பணி தொடங்கும் ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் ஆய்வாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். நாகை பாராளுமன்ற உறுப்பினர் கோபால் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையத்தை திறந்து வைத்து, 74 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட பணி தொடங்க ஆணைகளை வழங்கி பேசினார்.

இதில் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இளங்கோவன், உதவி கலெக்டர் கண்ணன், தலைஞாயிறு தொடக்்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் அவை.பாலசுப்பிரமணியன், பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் பத்மாசவுரிராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், தாசில்தார் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story