திருவாரூர் அருகே ஆற்றில் கிடந்த சாமி சிலைகள் மீட்பு


திருவாரூர் அருகே ஆற்றில் கிடந்த சாமி சிலைகள் மீட்பு
x
தினத்தந்தி 10 Jun 2017 3:45 AM IST (Updated: 10 Jun 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே ஆற்றில் கிடந்த சாமி சிலைகள் மீட்கப்பட்டன.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் எட்டியலூர் கிராமத்தில் உள்ள வெட்டாற்றில் நேற்று கல்லால் ஆன 3 சாமி சிலைகள் கிடந்தன. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சிலைகளை ஊருக்குள் எடுத்து சென்று பூஜை செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திருவாரூர் தாசில்தார் சண்முகவடிவேலு, எட்டியலூருக்கு சென்று கல்லால் ஆன சாமி சிலைகள் மூன்றையும் மீட்டு திருவாரூர் தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு வந்தார்.

மீட்கப்பட்டவை பெருமாள், பிரம்மன், குருதெட்சிணாமூர்த்தி சாமிகளின் சிலைகளாகும். இதில் பெருமாள் சிலை 1¼ அடி உயரம் இருந்தது. 4 முகங்களுடன் இருந்த பிரம்மன் சிலை 1½ அடி உயரமும்,

குருதெட்சிணாமூர்த்தி சிலை 2 அடி உயரமும் இருந்தது. தற்போது திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இந்த சிலைகள், பின்னர் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என தெரிகிறது.

போலீஸ் விசாரணை

இந்த சாமி சிலைகளை ஆற்றில் வீசி சென்றது யார்? வேறு கோவில்களில் இருந்து கடத்தி வரப்பட்ட சிலைகளா? என்பது பற்றி குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story