மதுராந்தகம் அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


மதுராந்தகம் அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2017 2:58 AM IST (Updated: 10 Jun 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த மாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்.

மதுராந்தகம், 

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த மாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன், காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் ஆத்தூர் கோபாலகண்ணன், துணை செயலாளர்கள் சதாசிவம், முருகதாஸ், வக்கீல் சதீஷ், சபரி, சந்தோஷ் ஆகியோர் முன்னிலையில் ஏராளமானோர் மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் அந்தோணிஸ்டாலின் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அந்த மதுக்கடையை திறக்க மாட்டோம் என்று போலீசார் உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story