ரெயில் தண்டவாளம் அருகே கால் துண்டிக்கப்பட்ட நிலையில் மயங்கி கிடந்த வாலிபர்


ரெயில் தண்டவாளம் அருகே கால் துண்டிக்கப்பட்ட நிலையில் மயங்கி கிடந்த வாலிபர்
x
தினத்தந்தி 9 Jun 2017 10:15 PM GMT (Updated: 2017-06-10T03:07:03+05:30)

ரெயில் தண்டவாளம் அருகே கால் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் மயங்கி கிடந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கும்பகோணம்,

கும்பகோணத்தை அடுத்த சுந்தரபெருமாள்கோவில் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மயங்கி கிடந்தார். அவருடைய இடது கால் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அந்த வாலிபரை உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாலிபரிடம் மானாமதுரையில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்வதற்கான ரெயில் டிக்கெட் இருந்தது. அதை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

விசாரணை

இதுபற்றி கும்பகோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கால் துண்டானது எப்படி? ரெயிலில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலைக்கு முயன்றாரா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story