அட்டைபெட்டியில் இருந்த ஆண் குழந்தையின் சடலம் போலீசார் விசாரணை
சென்னை திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் அட்டைபெட்டியில் இருந்த ஆண் குழந்தையின் சடலம்.
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் நேற்று முன்தினம் அட்டை பெட்டி ஒன்றை நாய்கள் கடித்து கொண்டிருந்தது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நாய்களை துரத்திவிட்டு அட்டைபெட்டியை பிரித்து பார்த்தார்.
அந்த பெட்டியில் பிறந்து 5 மாதங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் வந்த ஐஸ் அவுஸ் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த குழந்தையை சுடுகாட்டில் போட்டு சென்றது யார்? ஏதேனும் காதல் விவகாரத்தில் பிறந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து அந்த பகுதியை சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story