ஓசூரில் சுப்ரீம் மொபைல்ஸ் 14-வது கிளை திறப்பு நடிகை நிக்கி கல்ராணி பங்கேற்பு


ஓசூரில் சுப்ரீம் மொபைல்ஸ் 14-வது கிளை திறப்பு நடிகை நிக்கி கல்ராணி பங்கேற்பு
x
தினத்தந்தி 10 Jun 2017 3:43 AM IST (Updated: 10 Jun 2017 3:43 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் சுப்ரீம் மொபைல்சின் 14-வது கிளையை நடிகை நிக்கி கல்ராணி திறந்து வைத்தார்.

ஓசூர்,

திருப்பூரை தலைமையிடமாக கொண்ட சுப்ரீம் மொபைல்ஸ் பேரடைஸ் நிறுவனம், தமிழகமெங்கும் முக்கிய நகரங்களில் மொபைல்ஸ் ஷோரூம்களை நடத்தி வருகிறது. அனைத்து முன்னணி பிராண்ட் மொபைல் போன்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் இங்கு மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பாகலூர் சாலையில் சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்தின் 14-வது கிளை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.விழாவில், சுப்ரீம் மொபைல்ஸ் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன், சுப்ரீம் பைனான்ஸ் நிர்வாக இயக்குனர் செல்வராஜ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இந்த நிறுவனத்தின் விளம்பர தூதரான நடிகை நிக்கி கல்ராணி ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி ஓசூர் புதிய ஷோரூமை திறந்து வைத்தார்.

முதல் விற்பனை

மேலும் விழாவில் ஆர்.ஏ.டி.வி.எஸ். குழும தலைவர் ஜெயபால், லட்சுமி எண்டர்பிரைசஸ் யு.எஸ்.போலோ வினியோகஸ்தர் வாஸ்து பால் ரஜினிகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

முதல் விற்பனையை தம்பு கார்ஸ் நிர்வாக இயக்குனர் தம்பு என்ற பாலசந்தர் பெற்றுக்கொண்டார்.தொடர்ந்து, ஓசூர் கிளையின் மேலாளர்கள் அருள், கவுரிசங்கர் ஆகியோர் கூறியதாவது:- ஓசூரில் புதிய கிளை திறப்புவிழாவை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொபைல் போன் வாங்கும் அனைவருக்கும் டிராலி பேக் அல்லது டிராவல் பேக் பரிசாக வழங்கப்படுகிறது. சாம்சங் போன்களுக்கு பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் வட்டியில்லா கடனுதவி சுலப தவணைகளில் வழங்கப்படுகிறது. திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஜியோ 4 ஜி சிம் மற்றும் ஐடியா 2 ஜிபி டேட்டாவுடன் இலவசமாக வழங்கப்பட்டது. விரைவில் கரூர், அவினாசி ஆகிய நகரங்களிலும் எங்களது கிளைகள் திறக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ரசிகர்களுடன் ‘செல்பி’

விழாவில் கலந்து கொண்ட நடிகை நிக்கி கல்ராணி முன்னதாக, ஷோரூம் முன்பு அமைக்கப்பட்டிருந்து மேடை மீது ஏறி, பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். மேலும் சில ரசிகர், ரசிகைகளுடன் ‘செல்பி’ எடுத்துக் கொண்டார். பின்னர் அவர் பேசும் போது, மொட்ட சிவா, கெட்ட சிவா படத்தில் ராகவா லாரன்சுடன் நடித்த போது நான் மிகவும் பயந்தேன். ஆனால் அவர் எனக்கு தைரியம் தந்துபயப்படாமல் நடிக்க வேண்டும் என்று உற்சாகப்படுத்தினார். தற்போது தமிழில் கப்பா, கீ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன். ரசிகர்கள் தொடர்ந்து எனக்கு ஆதரவு தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

Next Story