பூந்தமல்லியில் பிளாஸ்டிக் அரிசி சோதனையில் 50 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியது


பூந்தமல்லியில் பிளாஸ்டிக் அரிசி சோதனையில் 50 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியது
x
தினத்தந்தி 10 Jun 2017 3:50 AM IST (Updated: 10 Jun 2017 3:50 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லியில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறதா? என கடைகளில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அங்கு விற்பனைக்கு வைத்து இருந்த 50 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பூந்தமல்லி,


கடைகளில் சோதனை

பூந்தமல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி பிரபாகரன் தலைமையில் சுதாகர், விஜயன் ஆகியோர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

பூந்தமல்லி டிரங்க் ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் பிளாஸ்டிக் அரிசி உள்ளதா? என்று சோதனை செய்தபோது அந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

50 கிலோ 

புகையிலை பொருள்

இதையடுத்து அந்த கடையில் விற்பனைக்காக மூட்டைகளில் பதுக்கி வைத்து இருந்த சுமார் 50 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, ‘‘பறிமுதலான புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.40 ஆயிரம் வரை இருக்கும். இவை குப்பை கிடங்கில் போட்டு அழிக்கப்படும். தொடர்ந்து இதுபோல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அந்த கடையின் உரிமமும் ரத்து செய்யப்படும்’’ என்றனர்.

வியாசர்பாடி

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். அங்கு தடை செய்யப்பட்ட மாவா போதை பொருளை தயாரித்து விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.

இதையடுத்து நிர்மலா (வயது 40), அவருடைய மகன்கள் பிரகாஷ்(23), பிரசாத்(21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ போதை பொருள்கள், ஒரு மிக்சி, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். கைதான தாய் மற்றும் மகன்கள் சிறையில் அடைக்கப் பட்டனர்.

Next Story