மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சேலம் பெண்கள் அணி வெற்றி


மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சேலம் பெண்கள் அணி வெற்றி
x
தினத்தந்தி 10 Jun 2017 4:23 AM IST (Updated: 10 Jun 2017 4:23 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சேலம் பெண்கள் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் மாநில அளவிலான கைப்பந்து போர்டி 2 நாட்கள் நடைபெற்றது. போட்டியை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார். போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண்கள் மற்றும் ஆண்கள் கைப்பந்து அணியினர் கலந்து கொண்டனர்.

இதில் பெண்களுக்கான போட்டியில் சேலம் செயின்ட்மேரிஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. கோபிச்செட்டிப்பாளையம் பி.கே.ஆர் அணி 2–வது பரிசையும், ஓசூர் ஜான்போஸ்கோ அணி 3–வது பரிசையும் பெற்றன.

ஆண்களுக்கான போட்டியில் தடாகம் கோவை அணி சாம்பியன் பட்டம் பெற்று முதல் பரிசையும், திருப்பத்தூர் பெஞ்சமின் அணி 2–வது பரிசையும், கோவை எம்.ஆர்.பி. பாய்ஸ் அணி 3–வது பரிசையும் பெற்றன.

பரிசுகள்

வெற்றி பெற்ற அணிகளுக்கு பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் வர்த்தக அணி மாநில செயலாளர் ராம.சகாதேவன் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சொக்கலிங்கம், முன்னாள் கனிம வள இணை இயக்குனர் திருவேங்கடம், திருக்கோஷ்டியூர் மாதவன், பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு மஞ்சுவிரட்டு ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பழனியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். போட்டியின் நடுவர்களாக அருள்தாஸ் தலைமையிலான குழுவினர் செயல்பட்டனர்.


Next Story