தமிழக அரசை செயல்படவிடாமல் பா.ஜனதா முடக்கி வைத்துள்ளது தொல்.திருமாவளவன் பேட்டி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை, சுதந்திரமாக செயல்படவிடாமல் பா.ஜனதா அரசு முடக்கி வைத்துள்ளதாக தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
சேலம்,
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், சாதி ஆணவ படுகொலைகளை தடுத்திட தனிச்சட்டம் இயற்றக்கோரி சேலத்தில் இருந்து சென்னைக்கு நேற்று நடைபயணம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று சேலம் வந்தார். சேலம் தொங்கும் பூங்கா எதிரே உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பின், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தொல்.திருமாவளவன் கூறியதாவது:-
நரேந்திரமோடி மத்தியில் பிரதமராக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில், இந்திய பொருளாதார வளர்ச்சி(ஜி.டி.பி.) யில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மன்மோகன்சிங் ஆட்சியில் இருந்தபோது பொருளாதார வளர்ச்சி 10.3 சதவீதமாக இருந்தது. ஆனால், மோடி அரசில் அது 6.6 சதவீதமாக குறைந்து வீழ்ச்சி அடைந்துள்ளது.
மாட்டுக்காக ஆட்சி
தேர்தல் நேரத்தில் மோடி அளித்த வாக்குறுதியான கருப்பு பணத்தை மீட்டு மக்களுக்கு வழங்குவதாகவும், ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்றும், ஆண்டுக்கு 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த வாக்குறுதிகளில் ஒன்றைகூட நிறைவேற்றமுடியவில்லை. மாறாக மதவெறியையும், சாதி வெறியையும் தூண்டி விடும் அரசாகவே உள்ளது.
இது போன்று பொருளாதார வீழ்ச்சியடைய செய்த பிரதமர் மோடி, பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார். எனவே, அவர் உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும். மத்திய அரசானது கார்பரேட் முதலாளிகளுக்கான அரசாக மட்டுமே உள்ளது. நாட்டுக்காக ஆட்சி நடத்தாமல் மாட்டுக்காக ஆட்சி நடத்தும் அரசாக உள்ளது.
பா.ஜனதா முடக்கி உள்ளது
மாட்டு இறைச்சி விவகாரத்தில் கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் தடைக்கு எதிரான கருத்தை கூறி வரும் நிலையில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. அரசு மிகவும் பலவீனமாக உள்ளது. இன்னும் 4 ஆண்டுகள் தமிழக அரசு நீடிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆனால், அ.தி.மு.க. அரசை பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆகியன சுதந்திரமாக செயல்பட விடாமல் முடக்கி வைத்துள்ளது. அ.தி.மு.க.வினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் லாபம் தேடி வருகிறது.
ஜனாதிபதி தேர்தல் என்பது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்க வேண்டும். இந்த தேர்தலில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவரை நிறுத்தி, தாங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவானவர்கள் என காட்ட பா.ஜனதா முயற்சிக்கிறது. எனவே, பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தும் வகையில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். அதற்கு மாநில கட்சிகள் முழு ஆதரவு அளித்திட வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் தலித் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

Related Tags :
Next Story