சேலம் முதல் ஆத்தூர் வரை பஸ்களை ‘சர்வீஸ்’ ரோட்டில் இயக்க நடவடிக்கை கலெக்டர் சம்பத் தகவல்
பயணிகள் எளிதாக செல்ல வசதியாக சேலம் முதல் ஆத்தூர் வரை பஸ்களை சர்வீஸ் ரோட்டில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சம்பத் தெரிவித்தார்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சம்பத், தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் ராமகிருஷ்ணன் மற்றும் அனைத்து உதவி கலெக்டர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், தாசில்தார்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் சம்பத் பேசியதாவது:-
கூடுதல் போலீசார் பணி
சேலம் மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் கூடுதல் போக்குவரத்து போலீசாரை கொண்டு போக்குவரத்து நெரிசல் இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாநகர பகுதிகளில் குற்ற செயல்களை அறவே தடுத்திடவும், பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திடும் வகையில் அம்மாபேட்டையில் பொதுமக்களின் பங்களிப்புடன் 201 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சி.சி.டி.வி கேமரா பொறுத்த தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சர்வீஸ் ரோட்டில் பஸ்கள்
மேட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெர்மல் நான்கு ரோடு ரவுண்டானாவில் மேட்டூரிலிருந்து ஈரோடு செல்லும் பஸ் நிறுத்தமானது ரவுண்டானாவிற்கு மிக அருகிலேயே அமைந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூராகவும் மற்றும் சாலை விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மேட்டூர் முதல் ஈரோடு செல்லும் சாலையில் பஸ்நிறுத்தத்தை தற்போது இருக்கும் இடத்திலிருந்து சுமார் 50 அடி தொலைவில் மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலம் முதல் ஆத்தூர் வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏத்தாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புத்திரகவுண்டம்பாளையம் கிராமம் மற்றும் சுற்று வட்டாரத்தில் 28 ஊராட்சிகள் உள்ளதால் பயணிகள் எளிதாக செல்ல ‘சர்வீஸ்‘ ரோடு வழியாக பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story