ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் பகுதியில் வளர்ச்சித் திட்ட பணிகள்; கலெக்டர் ஆய்வு
ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் பகுதியில் நடைபெற்றும் வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பாலைக்குடி கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளிகள் சீரமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.11லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் புதிதாக பள்ளிக்கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளின் தரம் குறித்தும், அதனை தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதி திட்டத்தின்கீழ் ரூ.8 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் தல்லாக்குளம் ஊருணி தூர்வாரப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
பின்பு காவனூரில் பாரத பிரதமரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சேதுரஸ்தா – நாகனேந்தல் இடையே சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்ட அவர் சாலைப்பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்து விரைவாக பணிகளை மேற்கொண்டு நிறைவு செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதன்பின் கடலூர் கிராமத்தில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அலங்கார கற்கள் சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
மண் அள்ளும் பணிபின்னர் கடலூர் கண்மாயில் மண் அள்ளுவதற்காக முன் அனுமதி பெற்ற பயனாளிகள் மூலம் தூர்வாரி மண் அள்ளும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டார். அப்போ ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பச்சமால், சோமசுந்தரம், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சங்கரஜோதி உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.