மத்திய பிரதேச அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
புதுவை விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று சுதேசி மில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய பிரதேச அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
புதுச்சேரி,
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை கண்டித்து புதுவை விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று சுதேசி மில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய பிரதேச அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் கீதநாதன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் கண்டன உரையாற்றினார். இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மாசிலாமணி, ரவி, ராஜா, கலியமூர்த்தி, பெருமாள், ராமச்சந்திரன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பஷீர் அகமது, விவசாய தொழிலாளர் சங்க முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story