குழந்தைகளின் ‘திரை நேரத்தை’ குறைக்க அறிவுரை


குழந்தைகளின் ‘திரை நேரத்தை’ குறைக்க அறிவுரை
x
தினத்தந்தி 10 Jun 2017 3:08 PM IST (Updated: 10 Jun 2017 3:08 PM IST)
t-max-icont-min-icon

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மின்னணுத் திரைக்கு முன்னால் செலவிடும் நேரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும் என்று கனடா குழந்தைகள் நல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மின்னணுத் திரைக்கு முன்னால் செலவிடும் நேரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும் என்று கனடா குழந்தைகள் நல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அழுகின்ற அல்லது அடம்பிடிக்கின்ற குழந்தைகளிடம் செல்போனை கொடுத்து விடுவது பல பெற்றோரின் வழக்கமாக இருக்கிறது. கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள், கணினி அல்லது ‘டேப்’பில் வீடியோ கேம்களில் ஆழ்ந்து விடுகின்றனர்.

அவ்வாறு அவர்களை மின்னணுத் திரை முன் அதிக நேரத்தைக் கழிக்க விடுவது தவறு என்று கனடா மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்குப் பதிலாக வேறு விளையாட்டுகளிலும், குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதற்கும் அவர்களை அறிவுறுத்த வேண்டும் என்கின்றனர்.

இரண்டில் இருந்து ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தினமும் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக மின்னணுத் திரைகளில் கழிக்கும் வகையில் கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மின்னணுத் திரைகளைப் பார்ப்பதை ஊக்குவிக்காமல் இருப்பது சிறந்தது எனவும் கூறப்படுகிறது.

அதோடு, இரவு படுக்கைக்குப் போவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே திரைகளை அணைத்துவிட வேண்டும்.

மொழி மற்றும் ஆக்கச்சிந்தனை, சுறுசுறுப்பான விளையாட்டுகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழிப்பது போன்றவற்றில் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும்.

அத்துடன், குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைப்பதை விட வெளியில் விளையாட விடுவது நல்லது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

முடியும்போது, வயதுக்குப் பொருத்தமான, அறிவுசார்ந்த திரைக்காட்சிகளைக் காண்பதற்கும், அவை குறித்த நுணுக்கமான கேள்விகளைக் கேட்பதற்கும் குழந்தைகளைப் பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும் என்று கனடா மருத்துவர்கள் கூறுகின்றனர். 

Next Story