உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம்


உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம்
x
தினத்தந்தி 10 Jun 2017 3:15 PM IST (Updated: 10 Jun 2017 3:15 PM IST)
t-max-icont-min-icon

குறைந்துகொண்டே வரும் மரபுசார்ந்த எரிசக்தி வளங்களின் காரணமாக, உலகெங்கிலும் மாற்று எரிசக்தி உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

குறைந்து கொண்டே வரும் மரபுசார்ந்த எரிசக்தி வளங்களின் காரணமாக, உலகெங்கிலும் மாற்று எரிசக்தி உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. பல்வேறு நாடுகளில், மிகப் பரந்த இடங்களில் பிரம்மாண்டமான முறையில் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் சீன நாடு, மிதக்கும் சூரிய மின் நிலையங்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தற்போது சுமார் 40 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய உலகின் மிகப் பெரிய மிதக்கும் சூரியசக்தி மின் நிலையத்தை அந்நாடு அமைத்திருக்கிறது.

இதனால், பெருமளவு நிலப்பரப்பை மிச்சப் படுத்தி வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும் என்று சீன அரசாங்கம் கருதுகிறது.

இந்த நிலையம் வெற்றிகரமாகச் செயல்பட்டால், மேலும் பல மிதக்கும் சூரியசக்தி நிலையங்களை அமைக்க அந்நாடு திட்டமிட்டிருக்கிறது.

பல விஷயங்களில் உலகின் முன்னோடியாகத் திகழும் சீனா, இந்த ஆக்கபூர்வமான விஷயத்திலும் முன்னே நிற்கிறது. 

Next Story