பவளப் பாறைகள் காப்பாற்றப்பட்டாலும்...


பவளப் பாறைகள் காப்பாற்றப்பட்டாலும்...
x
தினத்தந்தி 10 Jun 2017 3:18 PM IST (Updated: 10 Jun 2017 3:18 PM IST)
t-max-icont-min-icon

பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் பவளப் பாறைகளைக் காப்பாற்றி விட்டாலும், அவை முன்பிருந்ததைப் போல இருக்காது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் பவளப் பாறைகளைக் காப்பாற்றி விட்டாலும், அவை முன்பிருந்ததைப் போல இருக்காது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நிறம் தரக்கூடிய பாசி உருவாவதைத் தடுக்கும்போது, பவளப் பாறைகள் வெளுத்துப்போகின்றன என்று அவர்கள் ஆய்வு தெரிவிக்கிறது.

ஏப்ரல் மாதத்தில், ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய பவளப் பாறை அடுக்குகளில் மூன்றில் இரண்டு பகுதி, இரண்டு ஆண்டுகளில் நிறம் குன்றி வெளுத்துப்போனதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியது.

உடனடி நடவடிக்கைகள் மூலம் அரசு இந்த பவளப் பாறைகளை பாதுகாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பவளப் பாறைகள் அடுத்த நூற்றாண்டும் தொடர்ந்து இருக்கும் என்று நம்புவதாக ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலைமை ஆய்வாளரான பேராசிரியர் டெர்ரி ஹியூஸ் கூறு கிறார்.

‘ஆனால், எதிர்காலத்தில் இந்தப் பவளப் பாறைகள் மிகவும் வேறுபட்டதாக இருக்கப் போகின்றன’ என்றார் அவர்.

‘ஏற்கனவே இருக்கக்கூடியவற்றை அப்படியே மீட்டெடுப்பது சாத்தியமல்ல. வேறுபட்ட இனங் களின் கலவை அதில் இருக்கும்’ என்று அவர் கூறினார்.

தற்போதைய நிலைமையில், உலகில் கார்பன் வெளியேற்றம் இதேமாதிரி தொடர்ந்தால், பவளப் பாறைகளின் நிறம் வெளுத்துப்போகும் நிலை, 2050-க்குள் பல இடங்களில் தோன்றலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

பவளப் பாறை அடுக்குகளைக் கவனிப்பதில் மேற்கொள்ளப்படும் முக்கிய மாற்றங்களைப் பொறுத்து, எதிர்காலத்தில் அவை நிலைத்திருக்கும்.

இதற்கு, பாரிஸ் ‘பருவநிலை மாற்ற ஒப்பந்தம்’ போன்ற சர்வதேச ஒத்துழைப்பு அவசியம். ஆனால், தேசிய அளவில் கொள்கை ஒருங்கிணைப்பும் வேண்டும்.

மிகப் பெரிய அளவில் விரைவாகத் தங்களை மாற்றியமைத்துக்கொள்ளக்கூடிய திறனை பவளப் பாறை உயிரினங்கள் வெளிக்காட்டியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு மிகப் பெரிய அளவில் மாற்றியமைத்துக்கொள்ளும் பவளப் பாறை உயிரினங்களின் திறனை ஆய்வாளர்கள் ‘ஒரு சொத்து’ என்று குறிப்பிடுகின்றனர்.

கார்பன் வெளியீடு கட்டுப்படுத்தப்பட்டால், பவளப் பாறைகள் அவற்றின் இயல்பான நிலைக்கு மீட்கப்படலாம். ஆனால் அதற்கு பல்லாண்டு காலம் ஆகும்.

‘பவளப் பாறைகள் பற்றிய நம்பிக்கை இருக்கிறது. ஆனால், உலகம் வெப்பமாதலைக் கையாளுவதற்கு மிகக் குறுகிய கால அவகாசமே உள்ளது. மிகவும் குறைந்த அளவு கார்பன் வெளியேற்றத்துக்கு மாற நாம் எவ்வளவு சீக்கிரமாக நடவடிக்கை எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு நன்மை ஏற்படும்’ என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

கடலின் வளமான பவளப் பாறைகளைக் காப்பது நம் கைகளில்தான் இருக்கிறது. 

Next Story