ரெயில் நிலையத்தை திருமணம் செய்து கொண்ட பெண்!


ரெயில் நிலையத்தை திருமணம் செய்து கொண்ட பெண்!
x
தினத்தந்தி 10 Jun 2017 3:21 PM IST (Updated: 10 Jun 2017 3:21 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் ஒரு பெண் தான் ‘நேசித்த’ ரெயில் நிலையத்தை திருமணம் செய்து வியக்க வைத்திருக்கிறார்.

மெரிக்காவில் ஒரு பெண் தான் ‘நேசித்த’ ரெயில் நிலையத்தை திருமணம் செய்து வியக்க வைத்திருக்கிறார்.
 
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த அப்பெண்ணின் பெயர், கரோல் சான்டே பி. 45 வயதாகும் இவர், தன்னார்வ தொண்டு செய்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்று கூறப்படுகிறது.

கரோலின் வீட்டில் இருந்து 45 நிமிட பஸ் பயண தூரத்தில் ஒரு ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. அதன் மீது கரோலுக்கு 9 வயதில் இருந்தே தனி அன்பும் ஈர்ப்பும் ஏற்பட்டதாம்.

ஒருகட்டத்தில் அதுவே காதலாக மாறிவிட்டது. எனவே தினமும் 45 நிமிடம் பஸ்சில் பயணம் செய்து அந்த ரெயில் நிலையத்துக்குச் சென்று அங்கு சிறிது நேரம் அமர்ந்து வருவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

இந்நிலையில் ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்த ரெயில் நிலையத்தை தனது மனதளவில் திருமணம் செய்துகொண்டுவிட்டாராம்.

அந்தத் திருமண நாளை சமீபத்தில் தடபுடலாகக் கொண்டாடி மகிழ்ந்தார்.

இதை என்னவென்று சொல்வது? 

Next Story