தூத்துக்குடி மாவட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி பணிக்கான தேர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள நிர்வாக அதிகாரி பணிக்கான தேர்வு நேற்று நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள நிர்வாக அதிகாரி பணிக்கான தேர்வு நேற்று நடந்தது.
தேர்வுதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள நிர்வாக அதிகாரி நிலை–3, நிர்வாக அதிகாரி நிலை–4 ஆகிய பதவிகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கான தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள நிர்வாக அதிகாரி நிலை–3 பணியாளர்களுக்கான தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்தது.
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மற்றும் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் மற்றும் தூத்துக்குடி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தலைவர் (பொறுப்பு) ராஜாராம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பறக்கும் படைஆய்விற்கு பின்னர் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் கூறியதாவது;–
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள நிர்வாக அதிகாரி நிலை–3 பணியாளர்களுக்கான தேர்வு நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் நடந்தது. இந்த தேர்வை 1,247 பேர் எழுதினர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள நிர்வாக அதிகாரி நிலை–4 பணியாளர்களுக்கான தேர்வு நடக்கிறது. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வை 1,928 பேர் எழுதுகின்றனர்.
தேர்வு பணிக்கென நேற்று ஒரு கண்காணிப்பு குழுவும், இன்று 2 கண்காணிப்பு குழுக்களும் மற்றும் கண்காணிப்பு பணிக்கென உதவி கலெக்டர் நிலையில் ஒரு பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் தீபக்ஜேக்கப், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், தாசில்தார் சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.