ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசலில் போராட்டம்


ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசலில் போராட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2017 4:15 AM IST (Updated: 11 Jun 2017 12:47 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நெடுவாசலில் தலைவர்களின் முகமூடி அணிந்தவர்களுக்கு விருந்து வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் பொதுமக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ம் தேதி முதல் 2-வது கட்டமாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

60-வது நாளாக...

இந்தநிலையில், நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 60-வது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் மற்றும் திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களை கண்டு கொள்ளாத பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்களைப்போல முகமூடி அணிந்தவர்களுக்கு, இலை போட்டு விருந்து வைத்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story