கோ–ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் ரூ.315 கோடிக்கு துணி விற்பனை


கோ–ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் ரூ.315 கோடிக்கு துணி விற்பனை
x
தினத்தந்தி 11 Jun 2017 3:45 AM IST (Updated: 11 Jun 2017 1:10 AM IST)
t-max-icont-min-icon

கோ–ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் ரூ.315 கோடிக்கு துணி விற்பனை நிர்வாக இயக்குனர் தகவல்

ஊட்டி

இந்தியா முழுவதும் உள்ள கோ–ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் கடந்த ஆண்டில் ரூ.315 கோடிக்கு துணி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

ஊட்டியில் உள்ள கோ–ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை, தமிழ்நாடு கோ–ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ் நேற்று ஆய்வு செய்தார். தற்போது, புதிதாக வடிவமைக்கப்பட்ட பட்டு சேலைகள் 50 ரகங்களிலும், காட்டன் சேலைகள் 100 ரகங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ரூ.315 கோடிக்கு விற்பனை

அதில் காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, திருவனம் பட்டு, திண்டுக்கல் பட்டு, கோவை கோராப்பட்டு, மதுரை சுங்குடி உள்ளிட்ட பல்வேறு ரக சேலைகள் அடங்கும். வாழைப்பூவில் இருந்து எடுக்கப்பட்ட சாயம் மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சாயங்களால் காட்டன் சேலை உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதில் எந்த விதமான ரசாயன சாயங்களும் சேர்க்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் கடந்த ஆண்டில் இதுவரை ரூ.315 கோடிக்கு கோ–ஆப்டெக்ஸ் துணி மற்றும் பட்டு ரகங்களை விற்பனை செய்துள்ளது. கோ–ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் ஆன்லைன் மூலம் விற்பனை தொடங்கப்பட்டு, ரூ.1½ கோடிக்கு துணி மற்றும் பட்டு ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

காட்டன் சேலை

சென்னையில் உள்ள தலைமை இடத்தில் கோ–ஆப்டெக்சின் வடிவமைப்பு நிலையத்தில் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப, புதிய வடிவமைப்புகள் அறியப்பட்டு புதிய வடிவமைப்பு சேலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கோ–ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் நெசவாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கோ–ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் கடந்த ஆண்டு ரூ.1¾ கோடிக்கு காட்டன் சேலை மற்றும் துணி ரகங்களை விற்பனை செய்து உள்ளது. தற்போது புதிய ரக சேலைகள் 20 சதவீத தள்ளுபடி விலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கோவை மண்டல மேலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் தொடர்பு மேலாளர் நடராஜன், ஊட்டி விற்பனை நிலைய மேலாளர் சபினா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story