பாரிமுனையில் புதுப்பட டி.வி.டி.க்கள் பறிமுதல்


பாரிமுனையில் புதுப்பட டி.வி.டி.க்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Jun 2017 3:00 AM IST (Updated: 11 Jun 2017 1:12 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பாரிமுனை, பர்மா பஜார் பகுதியில் புதுப்பட டி.வி.டி.க்கள் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை, 

சென்னை பாரிமுனை, பர்மா பஜார் பகுதியில் உள்ள கடைகளில், புதுப்பட டி.வி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஒரு கடையில் சமீபத்தில் திரைக்கு வந்த தொண்டன், பாகுபலி–2, சங்கிலி புங்கிலி கதவ தொற உள்ளிட்ட படங்களின் டி.வி.டி.க்கள் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து, கடையின் உரிமையாளர் கொடுங்கையூரைச் சேர்ந்த சூசை ஆரோக்கியராஜ் (வயது 62) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடையில் இருந்து 30 புதுப்பட டி.வி.டி.க்களையும் பறிமுதல் செய்தனர். 

Next Story