போலி பாஸ்போர்ட் தயாரித்தவர் கைது


போலி பாஸ்போர்ட் தயாரித்தவர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2017 3:15 AM IST (Updated: 11 Jun 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

போலி பாஸ்போர்ட் தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணியில் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் திருவல்லிக்கேணியில் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ராமு (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலியாக தயாரிக்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

விசாரணைக்கு பின்னர் ராமு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ராமுவுடன் தொடர்புடையவர்கள் யார்? என்று மத்திய குற்றப்
பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story