பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ்–மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்


பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ்–மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்
x
தினத்தந்தி 11 Jun 2017 3:30 AM IST (Updated: 11 Jun 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

சென்னை கொருக்குப்பேட்டை பணிமனையில் என்ஜினீயரிங் தொடர்பான பராமரிப்பு பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:–

கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை அதிகாலை 2.45 மணிக்கு புறப்பட்டு, சென்னை மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில் திருவொற்றியூர்–சென்னை மூர்மார்க்கெட் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல அன்றைய தினம் சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில் சென்னை மூர்மார்க்கெட்–திருவொற்றியூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டு சூலூர்பேட்டை வரை செல்லும்.

ஆலப்புழா எக்ஸ்பிரஸ்

நாளை தன்பாத்–ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (வண்டிஎண்.13351) பெரம்பூரிலும், ஹவுரா–சென்னை சென்டிரல் ரெயில் (வண்டிஎண்.12839) திருவொற்றியூரிலும், சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து அதிகாலை 4.20 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் ரெயில் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்படும்.

சூலூர்பேட்டையில் இருந்து இன்று இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு சென்னை மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில் வில்லிவாக்கம் வழியாக திருப்பிவிடப்பட்டு, சென்னை மூர்மார்க்கெட் வந்தடையும். சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து நாளை இரவு 12.05 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் வில்லிவாக்கம், வியாசர்பாடி மற்றும் கொருக்குப்பேட்டை வழியாக திருப்பிவிடப்படும்.

சிறப்பு ரெயில்

தன்பாத்–ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (வண்டிஎண்.13351) சென்னை சென்டிரலில் இருந்து நாளை கொருக்குப்பேட்டை மற்றும் வியாசர்பாடி வழியாக திருப்பிவிடப்படும். தன்பாத்–ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (வண்டிஎண்.13351) சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வராது.

ஆகையால் ஒரு சிறப்பு மின்சார ரெயில் மூலம் பயணிகள் அந்த ரெயிலில் பயணம் செய்ய சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை 2 மணிக்கு பெரம்பூர் ரெயில் நிலையத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள். மேலும் சென்னை சென்டிரல் வரவேண்டிய பயணிகள் அந்த மின்சார ரெயிலில் திரும்ப அழைத்து வரப்படுவார்கள்.

Next Story