மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து விழிப்புணர்வு பிரசாரம்
பொது வினியோகத் திட்டத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது என நியாய விலை கடை ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. நியாய விலை கடை ஊழியர் சங்கம் சார்பில் நியாய விலை கடைகளை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் கொரடாச்சேரியில் நடந்தது. கருத்தரங்கிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட செயல் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூட்டுறவு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், கூட்டுறவு ஊழியர் சங்க மாநில இணைச்செயலாளர் சித்ரா, மாவட்ட தலைவர் முருகானந்தம், எல்.ஐ.சி. ஊழியர் சங்க கோட்ட செயலாளர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கருத்தரங்கில் பொது வினியோகத்திட்டத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-
உணவு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் பொது வினியோகத்திட்ட முறையை சீர்குலைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தில் குடும்ப அட்டைகளை முன்னுரிமை பெற்றவர், முன்னுரிமை அற்றவர் என 2 வகையாக பிரித்துள்ளனர். இதனால் எதிர்காலத்தில் பயனாளிகளை விடுவிக்கும் நிலை ஏற்படும். பொது வினியோகத்திட்டத்துக்கான அரிசி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு விட்டது. சர்க்கரைக்கான மானியம் குறைக்கப்பட்டு விட்டது. மண்எண்ணெய்க்கு நேரடியாக மானியம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற பொதுவினியோகத் திட்டத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து பிரசாரம் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொடி ஏற்றும் நிகழ்ச்சி
இதில் சங்க நிர்வாகிகள் மாரிமுத்து, மனோகரன், செல்வம், அருள்முருகன், முனுசாமி, வைஜெயந்திமாலா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மனோகரன் நன்றி கூறினார். முன்னதாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் சங்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

Related Tags :
Next Story