தார்வார் அருகே தடுப்புச்சுவரில் கார் மோதியது; அரசு ஊழியர் பலி மனைவி உள்பட 2 பேர் படுகாயம்
தார்வார் அருகே, தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் அரசு ஊழியர் பலியானார். மேலும் மனைவி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
உப்பள்ளி,
தார்வார் அருகே, தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் அரசு ஊழியர் பலியானார். மேலும் மனைவி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தடுப்புச்சுவரில் கார் மோதியதுபெலகாவி டவுனை சேர்ந்தவர் அசோக் துர்கப்பா தொட்டமணி (வயது 35). அரசு ஊழியர். இவர் நேற்று முன்தினம் மாலை தனது மனைவி கீதாவுடன் தார்வார் டவுனில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரில் சென்று கொண்டு இருந்தார். காரை டிரைவர் சுனில் எல்லப்பா ஓட்டினார்.
கார் நேற்று முன்தினம் இரவு தார்வார் தாலுகா மும்மிகட்டி பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்புச்சுவரில் பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பலிஅப்போது அசோக் துர்கப்பா தொட்டமணி சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. கீதாவும், டிரைவர் சுனில் எல்லப்பாவும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக தார்வார் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து அறிந்த தார்வார் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பலியான அசோக் துர்கப்பா தொட்டமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.