அரசு பள்ளியில் படித்தவர்கள்தான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவியில் உள்ளனர்


அரசு பள்ளியில் படித்தவர்கள்தான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவியில் உள்ளனர்
x
தினத்தந்தி 11 Jun 2017 4:15 AM IST (Updated: 11 Jun 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளியில் படித்தவர்கள்தான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவியில் உள்ளனர் பள்ளிக்கூட விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

கவுந்தப்பாடி

அரசு பள்ளியில் படித்தவர்கள்தான் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பதவியில் உள்ளனர் என்று பள்ளிக்கூட விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

மாணவ–மாணவிகளுக்கு பரிசு

கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த 14 மாணவ, மாணவிகளுக்கு சென்னை சவிதா பல்கலைக்கழக அறக்கட்டளை சார்பாக தலா ரூ.25 ஆயிரம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிக்கு சவிதா பல்கலைக்கழக வேந்தர் வீரையன் தலைமை தாங்கினார்.

இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ–மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்கள்.

சாதனை

விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:–

அரசு பள்ளியில் படித்தவர்கள்தான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற உயர் பதவியில் உள்ளனர். 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20 லட்சம் மாணவர்களுக்கு செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் 10 மணிக்கு ரிசல்ட் என்றால் 10 மணி 7 நிமிடத்துக்குள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்திய வரலாற்றிலேயே தமிழகத்தில் தான் முதன் முறையாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. தனியார் பள்ளிகளை விட அரசுபள்ளி மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க அரசு பல்வேறு திட்டங்களை அறிவிக்க உள்ளது.

அப்துல் கலாம் கனவு

அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்றார் நாங்கள் கனவு கண்டு கொண்டு இருக்கிறோம் மாணவர்களுக்கு என்ன என்ன செய்யலாம் என்று. அரசின் பல்வேறு திட்டங்களால் அரசு பள்ளியில் ஒரு இலட்சம் மாணவர்கள் இந்தாண்டு சேர்ந்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து விழாவில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.

விழாவில் கலெக்டர் பிரபாகர், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் கலைச்செல்வன், தலைமையாசிரியர்கள் மணிமேகலை, சுந்தரமூர்த்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், கவுந்தப்பாடி முன்னாள் ஊராட்சி தலைவர் பாவா தங்கமணி, ஊராட்சி செயலாளர் ஆறுமுகம், மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.


Next Story