அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்


அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 11 Jun 2017 3:15 AM IST (Updated: 11 Jun 2017 2:09 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்ட தொடக்கக்கல்வி துறை மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட தொடக்கக்கல்வி துறை மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கான அரசு சார்பில் ஒவ்வொரு ஒன்றியங்கள் வாரியாக நிதியும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அந்தந்த ஒன்றியங்களில் கல்வித்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மாணவர் சேர்க்கை குறித்த நிகழ்ச்சிகளுக்கு பயனாக காளையார்கோவில் அரசுப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் சிவகங்கையில் அரசுப்பள்ளிகளில் தீவிர மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பார்த்தசாரதி தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். உதவித்திட்ட அலுவலர் முகமது அப்துல்லா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கந்தவேல், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பால்ராஜ், சூசை, அறிவியல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாய பிரிட்டோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஊர்வலம் சண்முகராஜா கலையரங்கத்தில் தொடங்கி காந்திவீதி வழியாக சென்று கோர்ட்டு வாசலில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் சிவகங்கை ஒன்றியத்திலுள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.


Next Story