இரும்பு பெட்டிக்கடையை மாற்றும்போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
இரும்புக்கடையை மாற்றியபோது மின்சாரம் தாக்கி வாலிபர் ஒருவர் பலியானார்.
சென்னை,
சென்னை சேப்பாக்கம் லாக்நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் மெரினா கடற்கரையில் குளிர்பான கடை வைத்து இருந்தார். அங்கு மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட முருகன் கடையை அகற்ற உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் இருந்த தனது கடையை முருகன் தனது மகன் சேகர்(21), மற்றும் அவரது அண்ணன் மகன் யுவராஜ் (24) ஆகிய 2 பேர் உதவியுடன் பெட்டி கடையை அகற்றி முத்தையா தோட்டம் பகுதியில் உள்ள தந்தை ராமமூர்த்தி கடையின் அருகில் வைப்பதற்காக கொன்று சென்றனர்.
மின்சாரம் பாய்ந்து வாலிபர் சாவு
அப்போது அவரது தந்தை வீட்டில் இருந்த மின்சார வயர் அறுந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தது. இதை கவனிக்காமல் 3 பேரும் இரும்பாலான பெட்டிக்கடையை இறக்கினர். அப்போது தொங்கி கொண்டிருந்த வயரில் இருந்து மின்சாரம் இரும்பு கடையில் உரசியது. இதில் அந்த இரும்புபெட்டிக்கடை முழுவதும் மின்சாரம் பாய்ந்தது.
அப்போது அந்த பெட்டியை பிடித்துக்கொண்டிருந்த முருகன், சேகர், யுவராஜ் ஆகிய 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் யுவராஜ் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
தந்தை–மகன் உயிர் ஊசல்
மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த தந்தை–மகனான முருகன், சேகர் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஐஸ் அவுஸ் போலீசார் வழக்குப்
பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story