தமிழக அரசு பா.ஜனதாவின் அடிமையாக உள்ளது


தமிழக அரசு பா.ஜனதாவின் அடிமையாக உள்ளது
x
தினத்தந்தி 11 Jun 2017 4:00 AM IST (Updated: 11 Jun 2017 2:27 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு பா.ஜனதாவின் அடிமையாக உள்ளது என்று சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.

தாயில்பட்டி,

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள்விழா பொதுக்கூட்டம் தாயில்பட்டியில் நடந்தது. கோசுகுண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கனிராஜ் முன்னிலை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் பெரியண்ணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேசியதாவது;–

தி.மு.க. அரசு நிறைவேற்றிய திட்டங்கள் வரலாற்று சாதனையாக உள்ளன. இப்போதைய அரசு பா.ஜனதாவின் அடிமையாக உள்ளது. மறைமுகமாக பா.ஜனதாதான் ஆட்சி செய்கிறது. அ.தி.மு.க. வில் 4 அணிகள் உள்ளன. யார் தலைமையில் கட்சி இயங்குகிறது என்று அந்த கட்சிக்காரர்களுக்கே தெரியவில்லை.

இப்போதைக்கு எதை செய்யவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளாமல் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அடுத்த ஆண்டு நடக்கும் தேர்வுக்கு கால அட்டவணையை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார். பிளஸ்–1 மாணவர்களுக்கும் பொது தேர்வு என்று குழப்பிக்கொண்டு இருக்கிறார்.

தேர்தல்

மத்திய அரசு, மக்களைபற்றி கவலைப்படாமல் மாட்டு இறைச்சி, டிஜிட்டல் இந்தியா என்று கவனத்தை திசை திருப்புவதையே வேலையாக கொண்டுள்ளது. தமிழக சட்டசபைக்கு இந்த ஆண்டே தேர்தல் வரும். மு.க. ஸ்டாலின் முதல்–அமைச்சராகி அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பார். நமது மாவட்டத்துக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் முழுமையாக வந்து சேரும்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றம் நடந்தது. தலைமை கழக பேச்சாளர் தனபாலன், சாத்தூர் நகர செயலாளர் குருசாமி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், சரவணன் ஆகியோரும் பேசினார்கள். தாயில்பட்டி கிளை பிரதிநிதி பாண்டியன், ஊராட்சி செயலாளர்கள் முத்துக்குமார், மணிவண்ணன், பொன்ராஜ், சந்தனம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கருப்பசாமி நன்றி கூறினார்.


Next Story