வேலூரில் குரூப்-7 தேர்வை 929 பேர் எழுதினர் 916 பேர் வரவில்லை

வேலூரில் குரூப்-7 தேர்வை 929 பேர் எழுதினர் 916 பேர் வரவில்லை
x
தினத்தந்தி 11 Jun 2017 4:15 AM IST (Updated: 11 Jun 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் குரூப்-7 தேர்வை 929 பேர் எழுதினர் 916 பேர் வரவில்லை

வேலூர்,

இந்துசமய அறநிலையத்துறையில் காலியாக இருக்கும் செயல் அலுவலர் நிலை 3-க்கான பணியிடங்களை நிரப்ப குரூப்-7 தேர்வை நேற்று தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்த தேர்வை எழுதுவதற்காக வேலூர் மாவட்டத்தில் 1,845 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுதுவதற்காக வேலூரில் 6 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. நேற்று தேர்வு நடைபெற்றது. இதில் விண்ணப்பித்தவர்களில் 916 பேர் தேர்வு எழுதவரவில்லை. 929 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

Related Tags :
Next Story