பேரிடர் காலங்களில் மீட்பு பணிக்கு அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் கலெக்டர் பேச்சு
வேலூர் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டால் மீட்பு பணிக்கு அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என்று செயல்விளக்க நிகழ்ச்சியில் கலெக்டர் ராமன் பேசினார்.
வேலூர்,
வேலூர் மாவட்ட அரசு அதிகாரிகளுக்கு, நிலநடுக்கம் ஏற்பட்டால் எவ்வாறு செயல்படுவது, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து வேலூர் முஸ்லிம் அரசு மேல்நிலை பள்ளியில் செயல்விளக்கம் நடந்தது. இதில் அரக்கோணம் பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 35 வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு செயல்முறை விளக்கமளித்தனர்.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். போலீஸ் சூப்பிரண்டு பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், திட்ட இயக்குனர் பெரியசாமி மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
உண்மை சம்பவம் போன்று...
இதில் பேரிடர் காலங்களில் கட்டிடங்களில் சிக்கியவர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை எப்படி மீட்பது என்பது குறித்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் தத்ரூபமாக செய்து காண்பித்தனர். இதற்காக பள்ளியில் உள்ள 2 வகுப்பறைகளுக்குள் மாணவர்களை வைத்து ஒரு அறையில் உள்ளவர்கள் கட்டிடத்திற்குள் சிக்கியது போன்றும், ஒரு அறையில் உள்ளவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியது போன்றும் சித்தரித்து மீட்பு பணி நடைபெற்றது.
கட்டிடத்திற்குள் சிக்கியவர்களை உண்மையான ஜன்னல் கம்பிகளை அறுத்து எடுத்தும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை கட்டிடத்தின் உண்மையான சுவரை வெட்டி எடுத்தும் மீட்டனர். அதேபோன்று தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது போன்றும் செய்து காண்பித்தனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரின் இந்த செயல்விளக்கம் உண்மையான சம்பவம் போல காட்சியளித்தது.
அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்
அதைத்தொடர்ந்து பேசிய கலெக்டர் ராமன் ‘பேரிடர் காலங்களில் மீட்பு பணிக்கு அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும். இங்கு செய்து காண்பித்ததற்கும், உண்மையிலேயே பேரிடர் ஏற்பட்டால் அங்கு நடக்கும் மீட்பு பணிக்கும் வேறுபாடுகள் இருக்கும். அங்கு நாம் அவசரக்கதியில் செயல்படக் கூடாது. அப்போதுதான் இழப்புகளை குறைக்க முடியும். உயர் அதிகாரிகளுக்கு சரியான தகவல்களை தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் மீட்புக்கான நடவடிக்கைகளை சரியாக எடுக்கமுடியும்’ என்றார்.
முன்னதாக வி.ஐ.டி. பேரிடர் மீட்பு ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான கணபதி பேசுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் நில நடுக்கம் ஏற்பட்டால் 6.9 ரிக்டர் அளவுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே வாணியம்பாடி, திருப்பத்தூர், ஆம்பூர் பகுதிகளில் 15 முறை லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

Related Tags :
Next Story