விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி அரை நிர்வாண ஓட்டம்
விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அரை நிர்வாண ஓட்டம் நடைபெற்றது.
நீடாமங்கலம்,
விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நீடாமங்கலத்தில் இருந்து திருவாரூர் வரை அரை நிர்வாண ஓட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று நீடாமங்கலத்தில் இருந்து அரை நிர்வாண ஓட்டம் தொடங்கியது. ஓட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட தலைவர் ரகுராமன், மாவட்ட பொருளாளர் செந்தில், விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகி சேரன் ஆகியோர் தலைமை தாங்கினர். நீடாமங்கலம் சங்க ஒன்றிய செயலாளர் ஜான்கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டவர்கள் சட்டை அணியவில்லை. பனியன் மற்றும் குட்டையான கால்சட்டை அணிந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
போலீஸ் பாதுகாப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், கந்தசாமி, சோம.ராஜமாணிக்கம், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் கைலாசம், நகர செயலாளர் ஜோசப் ஆகியோர் அரை நிர்வாண ஓட்டத்தை தொடங்கி வைத்தனர். அரை நிர்வாண ஓட்டக்குழுவினருக்கு மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியப்பன் மற்றும் போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

Related Tags :
Next Story