ரூ.3 கோடி செலவில் கோர்ட்டு கட்டிடம்
ரூ.3 கோடியே 1 லட்சத்து 40 ஆயிரம் செலவில் கோர்ட்டு கட்டிடமும், ரூ.47 லட்சத்து 30 ஆயிரம் செலவில் குடியிருப்புகளும், 13 ஆயிரத்து 148 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
திருக்கழுக்குன்றம்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் கோர்ட்டு 37 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக திருக்கழுக்குன்றம்–சதுரங்கப்பட்டினம் சாலை நெரும்பூர் சந்திப்பு பகுதியில் 2 ஏக்கர் 15 சென்ட் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்தது. இதை தொடர்ந்து ரூ.3 கோடியே 1 லட்சத்து 40 ஆயிரம் செலவில் கோர்ட்டு கட்டிடமும், ரூ.47 லட்சத்து 30 ஆயிரம் செலவில் குடியிருப்புகளும், 13 ஆயிரத்து 148 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. இந்த கட்டிடத்தை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் திறந்து வைத்து பேசினார்.
காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வகுமார் வரவேற்புரையாற்றினார். இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுப்பிரமணியம், சட்டத்துறை அமைச்சர் சண்முகம், மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி தேவநாதன், மூத்த வக்கீல் கனகராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமாணி, சப்–கலெக்டர் ஜெயசீலன், மரகதம் குமரவேல் எம்.பி., திருப்போரூர் எம்.எல்.ஏ. கோதண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story